ஜுன் மாதத்துக்கான 2ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரு நாட்களுக்கு மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றும், நாளையும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
இதன்போதே சபை அமர்வை இரு நாட்களுக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாட்களிலும் காணி மற்றும் நிதி அமைச்சின் விடயதானங்கள் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளன.
அதேவேளை, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளிக்கவுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.