டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்கள் இருவரிடம், இரண்டு லட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது என்று நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்று மாலை (29) இடம்பெற்றுள்ளது.
பிசியோதெரப்பி வைத்தியரைப் போன்று நடித்த நபரொருவர், குறித்த பெண்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துவிட்டுவருமாறும் கூறியுள்ளார்.
அதன்பின்னர் பெண்கள் இருவரையும் அழைத்துச்சென்ற அவர், திடீரென காணாமல்போயுள்ளார். கைப்பைகளும் மாயமாகியுள்ளது. இதனால் கதறி அழுத பெண்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்