இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு மூன்று மாடி கட்டிடம் – ஜீவன் உறுதி!

” இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.” – என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி பிரதேசத்தில் பாரிய மழை வீழ்ச்சி பதிவான நிலையில் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்குள்ளானது.

இதனையடுத்து பாடசாலையின் வளப்பற்றாக்குறை தொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாதிப்பிற்குள்ளான இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சகல வசதிகளுடனும் கூடிய மூன்று மாடி கட்டிடத்தை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணித்து தருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் பாடசாலையின் அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles