நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியாவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.











