சிரச ஊடக நிறுவனத்தை தடை செய்ய திட்டம் வகுப்பு? – சபையில் சர்ச்சை

” சிரச ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த அல்லது ஒளிபரப்புக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசாங்க மேல் மட்டம் சட்டத்தரணிகளுடன் இது தொடர்பில் ஆலோசித்துவருகின்றது. இதனை பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை அரசாங்கம் சபையில் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சிரச ஊடக நிறுவனம் ஒடுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

அத்துடன், சரத் பொன்சேகா உள்ளிட்ட எதிரணி உறுப்பினர்களும் அரசாங்கத்தின் இந்த நகர்வுக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் இது விடயத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

எனினும், ஊடகங்களை ஒடுக்கும் எதிர்ப்பார்ப்பு இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் இல்லை. சிரச ஊடக நிறுவனத்தை ஒடுக்கும் நோக்கமும் இல்லை. ஆதாரம் இன்றியே சபையை குழப்பும் நோக்கில் எதிரணியினர் இவ்வாறு செயற்படுகின்றனர்.”  என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவ்விவகாரத்தால் சபையில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles