“இனி தமிழ் மொழி தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது, ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடை பிடிக்கப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு,
சஜித் தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தார்.
“இனி தமிழ் தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது: ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடை பிடிக்கப்படும்” என உறுதியளித்தார்.
ஆகவே விவகாரம் இத்துடன் முடிந்தது.
இதற்கு முன்னும் இப்படி நிகழ்ந்தது. சொன்னேன். எப்போதும் எடுத்த எடுப்பிலேயே, எடுத்தேன், கவிழ்த்தேன், என நான் அவசரப்படுவதில்லையே.
அதேபோல், என்ன நடந்தாலும், வலிக்காததை போல் சும்மா இருப்பதும் இல்லையே.
எங்கே, எப்போது, எப்படி, என்ன செய்யனும் என அனுபவம் எனக்கு கற்று கொடுத்திருக்கு.! எத்தனை பேரை கடந்து வந்த பட்டறிவு அனுபவம்..!










