இஷாலினியின் வழக்கில் என்ன நடக்கிறது? ஒரே பார்வையில்

  • இஷாலினியின் மரணம் குறித்து கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியூரனின் மனைவி, மாமனார், தரகர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
  • இஷாலினியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை மீள நடத்த நீதிமன்றம் அனுமதி
  • எட்டு பக்க விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
  • சிறுமியின் மரணம் தற்கொலையா? கொலையா என்பதில் சந்தேகம்!
  • இந்தச் சம்பவம் சிறுவர் அடிமை செயற்பாடாக கருதப்படுகிறது பாலியல் செயற்பாடுகளுக்கும் சிறுமி பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவிப்பு.
  • சிறுமி பணிபுரிந்த வீட்டின் தலைவராக ரிஷாட் பதியூதீன் இருப்பதால் அவரையும் இந்த வழக்கின் சந்தேக நபராக சேர்த்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிப்பு
  • சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது ரிஷாட்டின் மாமனார் திட்டமிட்டு தகவல்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு. வைத்தியசாலையில் இஷானிக்கு 18 வயது என குறிப்பிட்டுள்ளதாக தகவல்.
  • சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் அறையில் மண்ணெண்யை போத்தல் ஒன்றும் தலையணைக்குக் கீழ் லைட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.
  • ரிஷாட் பதியூதீன் வீட்டில் மண்ணெண்யை பயன்படுத்துவதில்லை என இதற்கு முன்னர் பணிபுரிந்த யுவதி தகவல்
  • ரிஷாட் வீட்டிற்கு அங்கிருந்த சாரதி, மண்ணெண்யை வாங்கி வந்ததாக, ரிஷாட்டின் மாமி வாக்குமூலம்
  • தான் மண்ணெண்யை வாங்கிவரவில்லை என சாரதி வாக்குமூலம்
  • ரிஷாட் பதியூதனின் மனைவியின் வாக்குமூலத்தில் முன் பின் முரணான தகவல்.
  • நூல் ஒன்றைப் பற்ற வைக்கச் சென்றபோது எரிந்ததாக முன்னர் தெரிவித்துள்ளார்.
  • எனினும், பொரல்லை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில், சிறுமியின் கூக்குரல் கேட்டுபார்த்போது, சிறுமி மீது நெருப்பு பரவியிருந்ததாக முன்னர் வாக்குமூலம்.
  • இந்தச் சம்பவத்தை பெரிதாக்கவோ, பொலிசாரிடம் செல்லவோ தேவையில்லை என பொலிஸ் சீருடைக்கு ஒத்த உடையில் இருந்த ஒருவர் இஷானி யின் பெற்றோருக்கு அழுத்தம். 50,000 ரூபா பணமும் வழங்கியதாக தகவல்.
  • பின்னர் இறுதிக் கிரியைகளுக்கு மேலம் 50,000 ரூபா வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
  • இதன்மூலம் இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டு. 
  • சிறுமி கடந்த 3ஆம் திகதி காலை 6.45அளவில் தீப்பற்றலுக்கு உள்ளான போதும் முற்பகல் 8.20 அளவிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிப்பு.
  • சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள், சாரதிகள் தட்டுப்பாடு இன்றி இருந்துள்ளன. ஆனால் 1990 என்ற நோயாளர் காவுவண்டி வரும் வரை காத்திருந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றமையும் சந்தேகம் எனத் தெரிவிப்பு.
  • ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மேலும் 9 சிறுமிகள் தொடர்பில் விசாரணை. இவர்களில் இரண்டு பேரை, ரிஷாட்டின் மைத்துனர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் தெரிவிப்பு.
  • சம்பவ தினத்தில் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 8 CCTV கெமராக்கில் மரணம் சம்பவித்த தினம் சுமார் 6.30 மணியின் பின்னர் 6 கெமராக்கள் செயற்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • மேலதிக விசாரணைக்காக CCTV Hard dick உள்ளிட்டவை மொரட்டுவ பல்கலைக்கழத்திடம் ஒப்படைப்பு

Related Articles

Latest Articles