T-20 உலகக்கிண்ணத்தில் விளையாடுவோம் – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் அணி 20க்கு20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியால் ரி 20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராக முடியாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், 20க்கு20 உலகக்கோப்பையில் நிச்சயமாக பங்கேற்போம் என, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடக முகாமையாளர் ஹிக்மாட் ஹசன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹிக்மாட் ஹசன் கூறுகையில் ‘‘நாங்கள் ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் உலகக் கிண்ணத்துக்கான அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் காபூல் நகருக்கு பயிற்சி மேற்கொள்ள வருவார்கள்.

அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு அணிகளுடன் இணைந்து விளையாட இருக்கும் முத்தரப்பு ரி 20 தொடரை நடத்துவதற்கான இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஹம்பாந்தோடடையில் பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறோம். அதன்பின் உள்ளூர் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளோம். உலகக்கோப்பைக்கு தயார்படுத்த இந்தத் தொடர்கள் சிறந்தவையாக இருக்கும்.

ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. நாங்கள் எப்போதும் எங்களுடைய வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் உதவி வருகிறோம். எங்களால் என்னென்ன முடியுமோ? அதையெல்லாம் செய்வோம். காபூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். அதனால் கவலைப்படுவதற்கு ஏதுமில்லை’’ என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles