தனிமைப்படுத்தல் ஊரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபா நிவாரண் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மற்றும் 2ஆது அலைகளின்போது நாடு முடக்கப்பட்டவேளைகளில் நிவாரணக் கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், இம்முறை 2 ஆயிரம் ரூபாவே வழங்கப்படவுள்ளது.










