பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது நாடு பெருமை கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி எறிதலின் ஆடவர் பிரிவில் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.










