தோட்டத் தொழிலாளர்களின் EPF,ETP நிலுவைகளை செலுத்தவும்- பிரதமர் பணிப்பு!

அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் கடந்த 20 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காது நிலுவையில் உள்ள ஈ.டி.எப்., ஈ.பி.எப் உட்பட ஏனைய சட்ட ரீதியான நிலுவைகளை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அதற்கான நடவடிக்கைகள் பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

மொனராகலை, கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் பணிபுரிந்த சுமார் 10,000 தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஈ.டி.எப்., ஈ.பி.எப (EPF,ETP) மற்றும் பிற சட்டரீதியான நிலுவைகள் வழங்கப்படாதுள்ளது.

இதுதொடர்பான தகவல்களை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மதியுகராஜா, செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தத்தை தொடர்ந்து, செந்தில் தொண்டமான் இந்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.

அலரி மாளிகையில் பிரதமருடன் இதுதொடர்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, செந்தில் தொண்டமான் உரிய ஆவணங்களை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளை உடனடியாக இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறும் குறித்த நிலுவைகளை வழங்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாக பல அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் தலையீட்டை மேற்கொண்டும் எவராலும் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது போயுள்ள நிலையில் செந்தில் தொண்டமானின் தலையீட்டால் 10000 தொழிலாளர்களுக்கு தற்போது தீர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles