தொண்டமானின் திட்டங்கள் தொடரும் – ரமேஷ்

எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான்,  மலையகத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும் அவரின் வேலைத்திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று இ.தொ.கா வின் நிதிச்செயலாளரும்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்ரவன் தெரிவித்தார்.

மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கடந்த ஆட்சியின்போது நாம் எதிர்கட்சியிலேயே அமர்ந்திருந்தோம். அதனால் எமது வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன.இருப்பினும் மாகாண அமைச்சில் அதிகாரம் காணப்பட்டமையினால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது பல வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். அவ்வாறனதொரு அரசாங்கமே பொதுத்தேர்தலின் பின் அமைய உள்ளது.  அதில் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு அமரர் ஆறுமுகன் தொண்டமான் காண நினைத்த அபிவிருத்தியை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம்.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles