இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள ஆழ்கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.










