பதுளையில் இதுவரை 24,169 பேருக்கு கொரோனா – 360 பேர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் 16-09-2021  இடம்பெற்ற ஆறு கோவிட்-19 உயிரிழப்புக்களுடன் 16-09-2021 வரையிலான மொத்த மரணங்கள் 360 பேராக அதிகரித்துள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட்-19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.

இவ்வகையில், வெலிமடை-50 பேர், பதுளை – 47 பேர், பண்டாரவளை -45 பேர், ஹாலிஎல-n39 பேர், மஹியங்கனை -38 பேர், ஹப்புத்தளை -29பேர், பசறை -29 பேர், ஊவா பரணகம -23 பேர், ஹல்துமுள்ளை- 15 பேர்,லுணுகலை- 11 பேர், ரிதிமாலியத்த- 11 பேர், எல்ல- 8பேர், மீகாகிவுல – 8 பேர், சொரணாதொட்ட – 06 பேர், கந்தகெட்டிய- 4 பேர் என்ற வகையில் இதுவரை காலப்பகுதியில் 360 பேர், கோவிட்-19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் இதுவரையில் 24 ஆயிரத்து நூற்று அறுபத்தொன்பது (24169) பேர் கோவிட் -19 தொற்றாளர்களாகவும், நாலாயிரத்து ஐநூற்று என்பத்திரண்டு பேர்,( 4582) சுய தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் பதுளை, பிந்துனுவௌ, ககாகொல்ல, பசறை ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கனிசமானவர்கள் தத்தம் வீடுகளில் , சுகாதார சேவை உத்தியோகஸ்த்தர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

16-09-2021 பண்டாரவளையில் இரு மரணங்களும் , எல்ல, ஹல்துமுள்ள, மஹியங்கனை, ரிதிமாலியத்த ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு மரணங்களுமாக ஆறு உயிரிழப்புக்கள் கோவிட்-19 தொற்றினால் இடம்பெற்றுள்ளன.

16-09-2021 வரையில் கோவிட்-19 தொற்றாளர்களாக பதுளை- 3284 பேர், பண்டாரவளை -1936 பேர், எல்ல- 1217 பேர், ஹல்துமுள்ளை- 1287 பேர், ஹாலிஎல- 1695 பேர், ஹப்புத்தளை-1506 பேர், கந்தகெட்டிய- 722 பேர், லுணுகலை-961 பேர், மஹியங்கனை – 3404 பேர், மீகாகிவுல- 591 பேர், பசறை – 1613 பேர், ரிதிமாலியத்தை- 1867 பேர், சொரணாதொட்டை – 431 பேர்,ஊவாபரணகம- 1309 பேர், வெலிமடை- 2346 பேர் என்ற வகையில் 24 ஆயிரத்து நூற்று அறுபத்தொன்பது பேர் (24169) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பதுளை மாவட்ட கோவிட்-19 தடுப்பு செயலணியினர் மேலும் தெரிவித்தனர்.

எம்.செல்வராஜா, பதுளை

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles