கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் அச்சுறுத்தல்! போலியானது என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, நாட்டிலுள்ள சகல பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர்களும் தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்க எவருக்கும் வழிவகுக்காமல் தத்தமது கடமைகளை திறம்பட முன்னெடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டடார்.

கட்டுநாயக்க விமான நிலையம் தாக்கப்படும் என்று பங்களாதேஸ் இராணுவ இணையத்தளத்தில் இருந்து குறித்த மின்னஞ்சல் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், பங்களாதேஸ் இராணுவ இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மின்னஞ்சல் போலியானது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனிப்பட்ட நலனை எதிர்பார்த்து கைக்குண்டொன்றை வைத்த இரண்டு சந்தேக நபர்கள் தற்போது பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் பொரிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles