” அரசாங்கத்தின் அனுமதியின்றி பார்களை திறக்க முடியாது. அவ்வாறு அனுமதி வழங்கிய பின்னரே அவை திறக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அது நல்ல விடயம் அல்ல. சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்துவதால் அவர்கள் நோயாளிகளாகக்கூடும்.
அதேவேளை, உண்பதற்கு இல்லை, 2 ஆயிரம் வேண்டும், ஐந்தாயிரம் வேண்டும் என வலியுறுத்தியவர்கள், பார்கள் திறக்கப்பட்ட பின்னர் ஒரு கிலோமீற்றர்வரை வரிசையில் நிற்கின்றனர்.”
இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.