‘நாளாந்தம் 10 கிலோ கொழுந்து மோசடி’ – தொழிலாளர்கள் போராட்டம்!

தோட்ட முகாமையாளரின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் டிஜிட்டல் தராசு வேண்டாம் என வலியுறுத்தியும் பொகவந்தலவை கீழ் பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை நேற்று முன்னெடுத்தனர்.

பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட பொகவந்தலாவை கீழ் பிரிவு சின்டாகட்டி கோயில் முன்றலிலேயே நேற்று மதியம் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கையில்,

டிஜிட்டல் தராசில் பச்சை கொழுந்து நிறுக்கும் போது எடையில் மோசடி இடம்பெறுகின்றது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று நேரம் கொழுந்து நிலுவை இடம்பெறுகையில் சுமார் 10 கிலோ கிராம் வரை மோசடி இடம்பெறுகிறது.

அத்தோடு உண்மையான கொழுந்தின் எடையை எங்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகவே நேற்றைய தினம் முகாமையாளரிடம் டிஜிட்டல் தராசு வேண்டாம். கடந்த காலங்களில் சாதாரண தராசினை இனி கொழுந்து நிறுக்க பயன்படுத்துமாறு கோரினோம். ஆனால், முகாமையாளர் அதை செய்யாது இன்றும் டிஜிட்டல் தராசிலே கொழுந்தை நிறுக்க முற்படுகின்றனர்.

ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் அறிவிக்கப்பட்ட காலம் தொட்டே தோட்ட நிர்வாகம் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி விட்டது. கொழுந்து இருக்கும் காலத்தில் எங்களால் 18 கிலோ கிராம் பச்சை கொழுந்து பறிக்க முடியும். ஆனால், கொழுந்து இல்லாத இக்காலத்தில் எவ்வாறு 18 கிலோ எடுக்க முடியும். 12,13 கிலோ எடுத்தால் அரை நாள் பெயரே போடுகின்றார். நாங்கள் எப்படி எங்களது வாழ்கையை கொண்டு செல்வது? தோட்டங்கள் துப்புரவு செய்வதில்லை தேயிலை மலைகள் காடாகியுள்ளது என தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles