முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், நாளை வெள்ளிக்கிழமை, இலஞ்ச – ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
பண்டோரா ஆவணத்தில் திருக்குமார் நடேசனின் பெயரும் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமையவே அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.










