” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் வழங்கப்படுவதில்லை.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
” அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா நடவடிக்கை எடுத்தார். ஆனாலும் அந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை.
எனவே, அனைவரும் இணைந்து இதற்கு எதிராக போராட வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் நான் அறிவித்தேன். இதற்கு உரிய பதில் இல்லை. பணி புறக்கணிப்பை மேற்கொண்டால் அது ஏற்றுமதி பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் மாற்றுவழி இல்லை.” – என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இரு பக்கங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 10 கிலோ கொழுந்து பறித்தாலும் 10 ரூபா வழங்கமுடியாது. அது நிர்வாகத்துக்கு பெரும் நஷ்டமாக அமையும். எனவே, நிர்வாகத்தையும் பாதுகாக்க வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டார்.










