தொடர் விலையேற்றத்தால் மக்கள் கொதிப்பு! அரசுமீது கடும் சீற்றம்!!

நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது.

தொடர் விலையேற்றம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அரசுமீது விமர்சனக் கணைகளையும் தொடுத்துவருகின்றனர்.

பால்மாவின் விலை ஏற்கனவே அதிகரித்திருந்த நிலையில், நேற்றிரவு முதல் அமுலுக்குவரும் வகையில்  லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

12.5 kg சிலிண்டர் – 2,750 ரூபா 5 kg சிலிண்டர் – 1,101 ரூபா
2.5 kg சிலிண்டர் – 520 ரூபா என புதிய விலைகள் அமைந்துள்ளன.

விரைவில் சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்பின்னல் பேக்கரி உற்பத்தி பொருட்கள், தேநீர் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles