மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மதியுகராஜா வலியுறுத்து

தேர்தல் என்பது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை. வருடக்கணக்கில் தடைப்பட்டு வருகின்ற மாகாண சபைத் தேர்தல்களை மென்மேலும் தாமதப்படுத்திக் கொண்டிருப்பது ஜனநாயக செயற்பாடுகளின் அடிப்படையை வேறுப்பதாகும் .

அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் நலன் என்பவற்றின் இப்பொறி முறை செயற்பட வேண்டும் . ஆனால் மாகாண சபைப் பொறிமுறையில் இன்று மக்கள் பிரதிநித்துவம் முடக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக உள்ளது என முன்னாள் மத்திய மாகாண சபை அவைத்தலைவர் துரை மதியுகராஜா மேலும் தெரிவித்துள்ளார் .

மத்திய மாகாண சபை கலைக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. அதேபோல் கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகின்றன . சிறு பான்மை மக்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு பொறிமுறையாக மாகாண சபைகள் கொண்டு வரப்பட்டன .

சகல அதிகாரங்களும் ஆளுநர் கையிலும் செயலாளர்கள் கையிலும் தங்கியுள்ளது . மக்கள் பிரதி நிதிகள் இல்லாத நிலையில் அநீதிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு . இந்நிலையானது மலையக மற்றும் வடக்கு , கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூககங்களுக்கு பாரிய இழப்பாகக் கருத முடியும் .

அனால் 13 வது திருத்தத்தின் அதிகாரங்கள் முற்றாக ஆளுநர்களின் கைகளிலே தங்கியுள்ளன . பரந்து விரிந்து வாழும் சிறுபான்மையினருக்கு விகிதாசார முறையே பொருத்தமானதாகும் . கலப்பு முறையில் தேர்தல் நடத்தினாலும் ஒப்பீட்டளவில் மலையகப் பிரதேசங்களில் அல்லது வடக்கு , கிழக்கிற்கு வெளியே உள்ள சிறுபான்மையினனரின் பிரதிநித்துவம் குறையும் வாய்ப்பு உண்டு .

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles