வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரோலினா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய எந்தனி டொமினிக் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் வழுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
க.கிஷாந்தன்