‘இலங்கைத் தேயிலைக்கு துபாயில் பெரும் வரவேற்பு’

துபாய் பொருளாதார வாரியத்தின் அழைப்பின் பேரில், இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துரையாடல் துபாய் பொருளாதார வாரியத்தின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, துபாய் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும்,கொவிட் தொற்று சூழ்நிலையிலும் துபாய் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் தலைமை இயக்குனர் சாமி தீன் அல் காஸ்மி, துபாய் தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக பொறியியல் அதிகாரி சயிட் அலவாடி, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் மேலதிக தலைமை இயக்குனர்(ADG) காலித் இப்ராகிம் மற்றும் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் ரயித் சஃபாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது தற்போதைய துபாய் பொருளாதார வளர்ச்சி வேலைத்திட்டங்கள் குறித்தும் , இப்பொருளாதார வாரியத்தால் உருவாக்கப்பட்ட துபாய் எக்ஸ்போ 2020 பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பொருளாதார தலைமை இயக்குனர்,இலங்கை தேயிலைக்கு துபாய் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளதாகவும், துபாய் பொருளாதார சபையில் உள்ள அதிகாரிகள் இலங்கை தேயிலை நல்ல சுவையுடன் இருப்பதாவும், இலங்கை தேயிலையின் தரம் உலக தரம் வாய்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது துபாய் அரசாங்கம் இலங்கையுடன் எதிர்காலத்தில் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க விருப்பத்தை தெரிவித்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles