” தீபாவளி பண்டியை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முற்பணமாக (எட்வான்ஸ்) 15 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்க்கும் தொலைநகல் மூலமாக வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொருட்களின் விலையேற்றம், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைப்பு, முறையான சம்பளம் இன்மை ஆகியவற்றால் அசௌகரியமான சூழ்நிலையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடாத்திச் செல்கின்றார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் மனிதாபிமான ரீதியில் பெருந்தோட்ட நிர்வாகங்களும் நடந்துகொள்ளவேண்டும். ஆகவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் அறவிடும் ரீதியில் ரூபாய் 15 ஆயிரத்தை முற் பணமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார் வடிவேல் சுரேஷ்.
