பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் 23 பேருக்கு 20-10-2021 கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாக பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.
பசறைப் பிரதேசத்தில் 65 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்கள் அனைவரும் அவர் தம் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்கானிப்பிலேயே, மேற்படி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கும் 21-10-2021ல் ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென்றும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், 21-10-2021ல் பதுளை, ஹப்புத்தளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளின் பாடசாலைகள் பலவற்றிலும் மாணவர்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை அவ்வப்பகுதி பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் துரிதமான மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்பகுதி வலயக் கல்விப் பணிப்பகங்களும், பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு பூரண பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர்.
எம். செல்வராஜா,பதுளை










