வெல்லவாய- எல்லவெல அருவியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ( தந்தை (38) , மகன் (15), மகள் (11) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) பகல் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்










