தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார். இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் சமூக வலைதளங்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்கள் இவரது கணக்குகளை முடக்கின. ஆகவே, சமூக வலைதளங்களுக்கும் டிரம்பிற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது.

இந்த நிலையில் தனி சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு Truth Social (உண்மை சமூகம்) எனப் பெயரிட்டுள்ளார். இதன் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles