தீபாவளி முற்பணத்துக்கு வட்டியா?

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை. மாறாக ஆயிரம் வலிகளும், ஏமாற்றங்களுமே கிடைத்துள்ளன.”- என்று மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக வந்த அறிவிப்புக்கு பின்னர் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

இவ்வளவு காலம் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த பெருநாள் முற்பணம் இப்போது வட்டி அடிப்படையிலான கடனாக வழங்கப்படுகிறது.இது மக்களின் உரிமையை மீறும் ஒரு செயற்பாடாகவே நோக்கப்படுகிறது.

இதுவரை காலமும் 10000/- முற்பணமாக வழங்கப்பட்டதோடு அத்தொகை 10 மாதத்திற்கு அறவிடப்படும் . ஆனால் இன்று அந்த சலுகை இல்லாமல் ஆக்கப்பட்டு நம்முடைய பணத்திற்கு நாமே வட்டி செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

எது எவ்வறாக இருந்தாலும் மக்களுக்கான வருடாந்த பெருநாள் முற்பணம் வழமை போலவே எந்தவித மேலதிக அறவீடுகளும் இன்றி வழங்கப்பபட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை கம்பனி, உயர் அதிகாரிகள், முகாயையாளர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் இனைந்து ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles