வெல்லவாய- வெலஆர பிரதேசத்திலுள்ள எல்லவெல நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பிரதேச சபையில் நேற்றுமுன்தினம் (21) இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுள் அதிகமானவர்கள், கடந்த காலங்களில் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தவுள்ள பாதுகாப்பு சுற்றுலா வேலைத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுத்து, இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பிரதேசத்தில் அனைவரையும் கவர்ந்த இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட பெருமளவான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தந்தாலும் அங்கு காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக கடந்த 20ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.










