அதிபர், ஆசிரியர்களை சீண்டிய ராஜா கொல்லுரேவுக்கு வைக்கப்பட்டது ஆப்பு!

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக செயற்பட்ட ராஜா கொல்லுரே, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைய, ராஜா கொல்லுரே தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

வடமேல் மாகாண ஆளுநராக செயற்படும் அவர், தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இதை செல்வதாக சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles