இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்ளில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 353 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் மேல்மாகாண எல்லையைக் கடக்க முற்பட்ட 542 வாகனங்கள் 1,088 பேருடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மேல் மாகாணத்தினுள் உள்நுழைய முற்பட்ட 684 வாகனங்கள் 1,156 பேருடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.