டொலர் இல்லாததால் 200 ரூபாவை கடந்தது சீனியின் விலை!

இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டில் போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் சீனி இறக்குமதியை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில் சந்தையில் சில தினங்களுக்கு முன்பு சீனி பற்றாக்குறை ஏற்பட்டதோடு, தற்போது சீனியின் விலை 200 ரூபா வரையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், நாட்டுக்கு தேவையான சீனியை இறக்குமதி செய்வதற்காக இன்றும் மற்றும் நாளை சீனி இறக்குமதியாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles