‘விவசாயிகளை வைத்து எதிரணி அரசியல் செய்கிறது’

” விவசாயிகளை தூண்டிவிட்டு, அவர்களை வீதியில் இறக்கி அதன்மூலம் அரசியல் பிழைப்பு நடத்திவருகின்றது ஐக்கிய மக்கள் சக்தி.” – என்று குற்றஞ்சாட்டியுள்ளார் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரசாயன உரப் பயன்பாட்டை கைவிட்டு, சேதன பசளை மூலமான விவசாயத்தை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. இரசாயன உரம் என்பது நஞ்சு. எமது மக்களைக் காக்க நாமும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கின்றோம். அதற்காகவே உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் விவசாயிகளை தூண்டிவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் அவர்களின் போராட்டங்கள் ஊடாகவும் அரசியல் செய்கின்றது.

மேற்படி கட்சிகளும் இரசாயன உரத்துக்கு எதிர்ப்பு. ஆனால் எதற்காக தற்போது இரசாயன உரத்துக்கு குரல் கொடுக்கின்றனர் என தெரியவில்லை.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles