அரச எதிர்ப்புப் போராட்டங்களை ஆரம்பியுங்கள் – ரணில்

ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதே வேளை, கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய சகல வலையமைப்புக்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியதாக  கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளாத, அரசாங்கத்திற்கு எதிராகவுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய வலையமைப்புக்களை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களில் கண்காணிப்பின் கீழ், கொவிட் நிலைமைக்கு ஏற்றவாறு மேற்குறித்த வலையமைப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறையினர் அமைப்பு, பல்கலைக்கழக பேராசிரியர் மன்றம், அரச மற்றும் தனியார் தொழிற்சங்கள் உள்ளிட்ட சகல அமைப்புக்களையும் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய துரிதமாக வலுப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதேவேளை , கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார  மேலும்  தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles