113 நாட்களுக்கு பின்னர் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறப்பு

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (06.07.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 5ம்,11ம், மற்றும் 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஸ்தம்பிதமடைந்திருந்த மாணவர்களின் கல்வி நடவடிக்ககைள் 113 நாட்களுக்கு பின்னர் இன்று (06.07.2020) ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், மாணவர்கள் பாடசாலைகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு அதிபர், மற்றும் ஆசிரியர்களினால் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் ஆசிரியர்களினால் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
5 ஆம் தர மாணவர்களுக்காக காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் தரம் 12 மற்றும் 10 மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
க.கிசாந்தன்

Related Articles

Latest Articles