‘கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றிணையுங்கள்’

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ‘ஊரிலிருந்து தொடங்குவோம்’ என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்த ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசானது மக்களை ஏமாற்றும் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பாக இராணுவத்தைப் பயன்படுத்தி சேதன விவசாயத்தை வலுக்கட்டாயமாகத் தான் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவிக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அராஜகம் காணப்படுகின்றது.

இந்த நாட்டில் தற்போது பால்மா, எரிவாயு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் இந்தக்  கோட்டாபய அரசானது தனது குடும்ப ஆட்சியை மென்மேலும் அதிகரித்து இந்த நாட்டில் அராஜகம் புரிந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது .

நாட்டில் ஒரு கோடி மக்கள் விவசாயிகளாக உள்ள நிலையில் ஒரு நெற்கதிர் என்றால் என்னவென்று தெரியாத ஜனாதிபதி தான் தற்போது விவசாயப் புரட்சி ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார்.

விவசாயப் பெருமக்களுடன் கலந்துரையாடியே சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், விவசாயி அல்லாத விவசாயத்துறையைப் பற்றி தெரியாத ஒருவர் நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய தீர்மானங்களை எடுப்பது ஒரு வியப்பான விடயமாகும்.

இந்த ஆட்சியை மாற்றி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles