சீரற்ற காலநிலை – கிளிநொச்சியிலும் நாளை பாடசாலைகள் பூட்டு!

சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற காலநிலையினை அடிப்படையாகக் கொண்டே விடுமுறையை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles