2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள, பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக்கட்சி போராட்டம் நடத்தவுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இன்று மாலை 3 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகும்.

சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, பாலித்த ரங்கே பண்டார, ஐ.தே.க வின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.
பஸில் சமர்ப்பிக்கவுள்ள பட்ஜட்டில் மக்கள் நலத் திட்டங்கள் இல்லை என்பது புலனாகின்றது. எனவே, மக்களுக்கான பட்ஜட்டாக அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.
