பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதே பாதீட்டின் நோக்கம்

கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச

இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். பிரதமரின் உரை வருமாறு,

” பல துறைகளின் சவால்களுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றே கூற வேண்டும். இது முக்கியமாக கொவிட்-19 பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதையும் பாதித்து மக்களைக் கடுமையாகப் பாதித்தது. அந்த தாக்கங்களில் இருந்து இலங்கையால் கூட விடுபட முடியவில்லை.

மேலும், கொவிட் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாம் முன்னெடுத்த செயற்பாடுகளின் ஊடாக பொருளாதாரத்தை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்புகின்றோம்.

வரையறுக்கப்பட்ட அரச நிதியை கொண்டிருந்த போதிலும், சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டது.

இதுவரை நாம் சுமார் 60,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம். வறுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் (100,000) பயிற்சி பெறாத நபர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.

அரச துறையில் புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் சுமார் 3.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது.

சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. நீர் வழங்கல், எரிசக்தி, போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக தொடர்ந்து மேற்கொண்டுள்ள முதலீடுகள் கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இது பொருளாதாரத்தின் இயக்கவியல் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை நிரூபித்துள்ளது.

தொற்றுநோயின் தாக்கத்தால் நமது பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. அந்நியச் செலாவணி, பணப்புழக்கம் மற்றும் ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கு, எதிர்காலத்தில் அந்நியச் செலாவணி வரவைப் பாதுகாக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

உலகளாவிய சுற்றுலாத் துறை மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க சாதகமான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கும், வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் அனுப்பும் பணத்தை வங்கி முறைக்கு ஈர்ப்பதற்கும் நாங்கள் மத்திய வங்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

வெளிநாட்டுத் துறையின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கு குறுகிய கால மூலோபாய திட்டங்கள் உட்பட பொருளாதாரத்தில் அனைத்து பங்குதாரர்களின் நம்பிக்கையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட
‘பாரிய பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஆறு (6) மாதக் கண்ணோட்டம்’ மத்திய வங்கியினால் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பொருளாதாரம் ஒரு சவாலான காலகட்டத்தை கடந்து செல்வதை நாம் அறிவோம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கான முன்மொழிவுகள் எதிர்காலத்திலும் அதற்குப் பின்னரும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கையில் எமது எதிர்காலத் திட்டங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பயனளிக்கும் மக்களை மையமாகக் கொண்ட சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த பலம் கிடைத்துள்ளது.

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு நாம் செயற்படுத்தும் நிலையான வேலைத்திட்டத்துடன் கைக்கோர்த்து நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பங்களிக்குமாறு அனைவரிடமும் கோருகின்றோம் .” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles