இலங்கையில் 2022 மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையிடம் தற்போது 2 பில்லியன் அந்நியச் செலாவணியே கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 300 மில்லியன் தங்கமா இருக்கின்றது. மீதமுள்ள 1.7. பில்லியனை வைத்துக்கொண்டு நாட்டை நிர்வகிக்கமுடியாது.
அடுத்த வருடம் 5 முதல் 6 பில்லியன்வரை கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதனை எவ்வாறு செலுத்துவது? நாட்டு வசம் பணம் இல்லை.
நாட்டில் தற்போது உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். உணவுத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் விநியோகத்தில் தடை ஏற்படும்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதற்கு அரசிடம் சரியான திட்டம் வேண்டும். இல்லையெனில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.”- என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.