’19’ இற்கு சமாதிகட்டும் ’20’ – செப்டம்பரில் சபையில் முன்வைப்பு!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான 20 ஆவது திருத்தச்சட்டமூலம் செப்டம்பர் நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு நாட்டு மக்கள் பொதுத்தேர்தல்மூலம் அனுமதி வழங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் என்பது ஐந்தாண்டுகலாகவே இருக்கும் என்றும், ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என்ற வரையறையும் மாறாது எனவும் புதிய நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிய பின்னரே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி இடம்பெறும் என பஸில் ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னார் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles