நானுஒயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஒயா கிலாரண்டன் மேற்பிரிவில் இன்று (7)காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது
இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ் வெடிப்பு சம்பவத்தில் உயிராபத்துக்களும் , காயங்கள் ஏற்படவில்லை எனவும், சமையலறைக்கும் , சமையல் பாத்திரங்களுக்கும் மாத்திரம் பாதிக்கப்பப்பட்டுள்ளன.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நானுஒயா பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
டி.சந்ரு செ.திவாகரன்










