‘கூட்டு ஒப்பந்தம் வேண்டும்’ – லிந்துலையில் போராட்டம்! இதொகாவும் ஆதரவு

தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (12.12.2021) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் பங்கேற்று, கூட்டு ஒப்பந்தத்துக்காக குரல் எழுப்பினர்.

லிந்துலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் டயகம, தலவாக்கலை, கொட்டகலை, லிந்துலை மற்றும் ஏனைய சில தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இ.தொ.காவின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சக்திவேல், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட இ.தொ.காவின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்துடன், தமது உரிய வகையில் சம்பள கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

” கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரை நாள் பெயர்தான் விழுகின்றது. ஆயிரம் ரூபா கிடைத்தும் பயன் இல்லை. ” என தொழிலாளர்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் தமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய மக்கள், அந்த ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles