பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
மேற்படி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் நிறைவுக்குவரும் நிலையிலேயே அதன் பதவி காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்மானம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.










