பசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பசறை நகரிலிருந்து மடூல்சீமைக்கு செல்லும் வீதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கள்ளு கடைக்கு செல்லும் ஒற்றையடிப்பாதையில் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சுமார் இரண்டு மணி நேரம் அவ்விடத்திலேயே விழுந்து கிடந்ததாகவும் அவ்வழியில் செல்பவர்களால் அவசர நோய் காவு வண்டி சேவைக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற அவசர நோய் காவு வண்டி ஊழியர்களினால் குறித்த நபர் மரணித்துள்ளமை ஊர்ஜிதப்படுத்தபட்டமையைத் தொடர்ந்து நோய் காவு வண்டி ஊழியர்களினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

உடன் ஸ்தானத்துற்கு விரைந்த பசறை பொலிஸார் மரணித்த நபரிடமிருந்து மின் கட்டண பற்றுசீட்டு ஒன்றை மீட்டெடுத்தனர் . பற்றுச்சீட்டில் பசறை புஹுல் வத்தைப் பகுதி விலாசமிடப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து பொலிஸார் மரணித்த நபர் புஹுல்வத்தைப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles