நோர்வூட் பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

நோர்வூட் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபைத்தலைவர் கே.கே ரவி தெரிவித்தார்.

வரவுசெலவுதிட்டம் பிரதேசசபை தலைவர் கே.கே. ரவி தலைமையில் நேற்று (17) முன்வைக்கப்பட்ட போதே அந்த வரவு செலவு திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நோர்வூட் பிரதேசசபையின் 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் 11 பேரும், அருணலு மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினரும்,சுயேட்சை கட்சியினை சேர்ந்த ஒருவரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவருமாக 14 பேர் ஆதரவாகவும் எதிராக ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் 07 பேர் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Latest Articles