‘மலேசியாவில் வேலை வாய்ப்பு’ – விண்ணப்பம் கோருகிறார் அரவிந்தகுமார் எம்.பி.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் பகீரத முயற்சியினால் மலேசியா நாட்டின் பல்வேறு துறைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிற்றூழியர்களின் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மலேசியா நாட்டின் பல்வேறு துறைகளில், பல்வேறு நிறுவனங்களில் சுத்தகரிப்பு ஊழியர்கள், சமையலறை உதவியாளர்கள், பராமரிப்பு ஊழியர்கள் என்ற வகையில், தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இத்தொழில் வாய்ப்புக்களுக்கு ஒரு இலட்ச ரூபாவுக்கு மேல் மாதாந்த சம்பளமும் வழங்கப்படவுள்ளன.

இத்தொழில் வாய்ப்புக்களுக்கு எவ்வித கட்டணும் அறவிடப்படாமல் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன.

18 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவர்களும், கல்வித்தரம் ஏழாம் ஆண்டிற்கு மேல் கல்வி கற்றவர்களும் அனைத்து நாடுகளுக்குமான (ALL COUNTRIES) கடவுச்சீட்டுக்கள் பெற்றிருப்பவர்களும், மேற்படி தொழில் வாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்பவர்களுக்கான விமானச்சீட்டுக்கள், தொழில் தரும் நிறுவனங்களினால் பெற்றுக்கொடுக்கப்படும். விமானச்சீட்டுகளுக்குரிய சுமார் 55 ஆயிரம் ரூபாவிற்கான இத்தொகை, ஆறு மாத தவணைகளில் சம்பளத்திலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும்.

தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு, இலவச தங்குமிடங்கள், தொழில் புரியும் நிலையங்களுக்கு இலவச போக்குவரத்து ஆகிய வசதிகளும் தொழில் தருனர்களினால் மேற்கொள்ளப்படும்.

இத்தொழில் வாய்ப்புக்கள் குறித்த மேலதிக விபரங்களை பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அதிகாரி பாபு ஆனந்தராஜாவுடன் தொலைபேசி இலக்கத்தோடு 077-9135793ல் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

இத் தொழில் வாய்ப்புக்களைப் பெற விரும்புவர்கள், தங்களது சுயவிபரக் கோவைகள் மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான விபரங்கள் அடங்கிய போட்டோ பிரதி ஆகியனவற்றை பாராளுமன்ற உறுப்பினரின் இல. 19, பதுளுப்பிட்டிய, பதுளை அலுவலகத்தில் ஒப்படைக்கவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும்.

பிரதேச ரீதியான பாராபட்சமின்றி அனைத்து இளைஞர்களும் விண்ணப்பிக்க முடியும். கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை எமது இளைஞாகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.

Related Articles

Latest Articles