மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஹட்டனில் “அபுசாலி சிறுவர் பூங்கா” மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன், ஹட்டன்ஹு டிக்கோயா நகரசபை நிதியில் புனரமைக்கப்பட்ட அழகமுத்து இளைப்பாறும் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் , ஹட்டன் – டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன், உப தலைவர், நகர சபை உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட பிரதநிதிகள் கலந்துக் கொண்டனர்.
