” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கோடு தமிழ்க் கட்சிகளின் கூட்டணி செயற்படுமாக இருந்தால் கூட்டு ஆவணத்தில் கையொப்பம் இடுவோம். உள்நோக்கம் ஏதேனும் இருப்பின் கையொப்பமிடமாட்டோம்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் அறிவித்துள்ளது.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இந்திய பிரதமருக்கு அனுப்பும் நோக்கில் தமிழ் பேசும் கட்சிகளால் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டு ஆவணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே , சங்கத்தின் தலைவர் திகாம்பரம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
அத்துடன், கூட்டு ஒப்பந்தம் அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










