‘தற்போதைய அமைச்சரவை அரசமைப்புக்கு முரணானது’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் தற்போதைய அமைச்சரவையானது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஒமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

” அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யாதவர்கள் தமது பதவிகளில் செயற்பட முடியாது.

நிதியமைச்சர் மாத்திரமே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்யாதவர்களுக்கு தமது பதவிகளில் செயற்பட அதிகாரம் இல்லை.

எனவே, கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையம், துறைமுக நகர ஒப்பந்தங்கள் உட்பட இந்த அமைச்சரவையால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் அரசமைப்புக்கு முரணானவை.” – எனவும் தேரர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles